வறண்ட சருமம்
கர்ப்பகாலத்தில் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிப்பதால் உடல் வறட்சித் தன்மையடைகிறது. இதனால் சருமம், செதில் செதிலாக மாறும். மென்மையான மாய்ஸரைசர் பூசிவர சருமம் மென்மையடையும். பிரசவித்த பெண்களுக்கு கரும்புள்ளிகள் ஏற்படுவது இயற்கை. வெளியில் கிளம்பும் போதே வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கான கிரீம் உபயோகிக்கலாம். போலிக் அமிலம் உள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். பச்சைக் காய்கறிகள், முட்டை போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். முகத்தில் கருவளையம் உள்ள இடங்களில் ஸ்க்ரப் வைத்து தேய்த்தால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.
கூந்தல் உதிர்வு
கர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வது அனேகப் பெண்களுக்கு பிரச்சினை. இந்தக் காலத்தில் எனனதான் போஷக்கான உணவை சாப்பிட்டாலும் பிரச்சினை தீராது. வருமுன் காப்பதே இதற்கு சரியான தீர்வு. குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் முன்பே இரும்புச் சத்துள்ள உணவை அதிகம் சாப்பிட்டு வரவேண்டும்.
பித்த வெடிப்பு
நீர்ச்சத்து குறைவினால் பெண்களுக்கு கால்களில் பித்த வெடிப்பு ஏற்படுகிறது. தினசரி காலை, மாலை நேரங்களில் பித்தவெடிப்பை போக்கும் கற்களைக் கொண்டு தேய்க்க இறந்த செல்கள் உதிர்ந்து விடும். வாஸலின் பூசி வர பித்தவெடிப்பு குணமடையும்.
No comments:
Post a Comment